வடகிழக்கு ரீதியில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலிற்கு ஆதரவளிக்குமாறு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் அழைப்பு!!
நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வானது பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் சபை உறுப்பினர்களுடனும் நேற்று இடம்பெற்றது.
இறைவணக்கத்தை தொடர்ந்து தமிழில் ஒலிபரப்பப்பட்ட தேசிய கீதத்துடனும் ஆரம்பிக்கப்பட்ட இவ் அமர்வில் தவிசாளரினால் முல்லைத்தீவு மாவட்டம் கரடியனாறு பொலிஸ் பிரிவு இராணுவத்தினரால் தாக்கப்பட்டு காணாமல் போன நிலையில் முத்தையன் கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் கபில்ராஜ் அவர்களுக்கு மௌன அஞ்சலி ஏற்பாட்டினையும் சபையில் முன்னெடுத்து நிகழ்த்தினார்.
இதன் போது கருத்து கூறுகையில், வடகிழக்குப் பகுதிகளில் வாழ்கின்ற சிறுபான்மை தமிழர்களுக்கு அநீதி இளைக்கப்படுவதாகவும், இவ்வாறான இராணுவத்தினரின் மிலேச்ச தனமான செயல்களை வன்மையாக கண்டித்து இந் நல்லாட்சி அரசாங்கத்திலே நீதியான தீர்வு வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு எனவும் கேட்டுக்கொண்டதுடன் இவ்வாறான கெடுபிடிகளுக்கு எதிராக எமது தமிழரசு கட்சியினரால் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாள் நிகழ்விற்கு இச்சபையின் எம்முடன் இணைந்து பயணிக்கும் கட்சியினரும் ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments