Column Left

Vettri

Breaking News

நாவிதன்வெளியில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தின் சுற்றுமதில் அமைக்க அடிக்கல்




( வி.ரி.சகாதேவராஜா) மாகாண நன்கொடை (PSDG) நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாவிதன்வெளிப் பிரதேச சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தின் 4ம் கட்ட சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தவிசாளர் இ.ரூபசாந்தன் தலைமையில் நேற்று நடைபெற்றது. தவிசாளர் முதலாவது அடிக்கல்லினை நட்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பிரதித் தவிசாளர் கு.புவனரூபன் சபையின் செயலாளர், உள்ளூராட்சி உதவியாளர், தொழிநுட்ப உத்தியோகத்தர், சனசமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அடிக்கற்களை நட்டனர். நீண்ட காலமாக சுற்றுமதிலின்றிக் காணப்படும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே இவ்வேலைத்திட்டம் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது

No comments