Column Left

Vettri

Breaking News

. வெருகலம்பதியில் எண்ணெய்க் காப்பு சாத்த அலைமோதிய பல்லாயிரம் பக்தர்கள் !




  வி.ரி.சகாதேவராஜா)

 
மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களின் எல்லையில்  மகாவலி நதி தீரத்திலே அமைந்துள்ள வெருகலம்பதி  ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி முருகபெருமானுக்கு எண்ணைய்க்காப்பு சாத்த இன்று (7) சனிக்கிழமை ஆயிரக்கணக்கான அடியார்கள் கியூ வரிசையில் அலைமோதினர்.

சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கியூ வரிசை நீண்டிருந்தது.

காலையிலிருந்தே சுமார் ஐயாயிரம் அடியார்கள் கியூ வரிசையில் காத்து நின்றனர்.

காலை 7 மணிக்கு சென்ற ஒரு பக்தர் எண்ணைய்க்காப்பு சாத்த 13 மணியாகியது.


வெருகலம்பதி  ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி முருகபெருமானுக்கும்  கஜவல்லி மஹாவல்லி சமேத ஸ்ரீ சித்திர வேலாயுத முருகபெருமானுக்கும் ஏனைய பரிபாலன மூர்த்திகளுக்கும் மஹாகும்பாபிஷேகம் நாளை  08.06.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00மணியளவில் கோலாகலமாக இடம்பெறும்.






No comments

Subscribe Us