Column Left

Vettri

Breaking News

தமிழினப்படுகொலைக்கானநீதி,பொறுப்புக்கூறலினை தமிழ் மக்களுக்கு சர்வதேசம் வழங்க வேண்டும் - கோடிஸ்வரன் எம்பி வலியுறுத்து.




(வெற்றி நியூஸ் நிருபர் )

தமிழினப்படுகொலைக்கானநீதிபொறுப்புக்கூறலினை தமிழ் மக்களுக்கு சர்வதேசம் வழங்க வேண்டும் - கோடிஸ்வரன் எம்பி வலியுறுத்து.

யாழ் செம்மணி புதைகுழியில் உயிரிழந்தவர்களுக்கு, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், தமிழின படுகொலைக்கும் சர்வதேசத்திடம் நீதி கோரி  அணையா விளக்கு  போராட்டம் யாழ் செம்மணி  பகுதியில் பொதுமக்களின் ஏற்பாட்டில்  இடம்பெற்று வருகின்றது.

இப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு கட்சி  பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதளுடன் பொதுமக்களும் இணைந்து பதாதைகள் தீப்பந்தங்கள் ஏந்தி கோஷங்களை எழுப்பி நேற்று(23)ஒந்தாச்சிமடம் பாலத்திற்கு அருகாமையில்  மாலை அணையா விளக்கு போராட்டம் இடம்பெற்றது. இப் போராட்டத்தில் கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் :-  இலங்கைக்கு விஜயம் செய்கின்ற  மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளரிடம் எமது தமிழ் மக்கள் எமக்கு இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதியும் நியாயமும் கேட்டு நிற்கின்றார்கள் சர்வதேச விசாரணையை நடத்தி நீதியினை வழங்க வேண்டும். இலங்கை அரசானது  பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்திலிருந்து விலகி நிற்கின்றது. அன்று தொடக்கம் இன்று வரை தனது செயற்பாட்டில் இருந்து ஒரு துளி கூட வெளிப்படுத்தாத வகையில் காணப்படுகின்றது. எமது மக்களுக்கான நீதியினை சர்வதேசம் தராத வண்ணமேவுள்ளது. இதற்கான நீதியினையும்  நியாயத்தினை பொறுப்புக் கூறலினையும் சர்வதேச விசாரணையினையின் மூலம் சர்வதேசம் எமக்கு வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் ஏனைய உறவுகளுக்கும் நியாயம்,நீதி வேண்டி நிற்கின்றோம்.என குறிப்பிட்டார். 




No comments

Subscribe Us