Column Left

Vettri

Breaking News

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பொருளாளர் ரஹ்மத் மன்சூர் விடுக்கும் வாழ்த்துச் செய்தி!!




ஏ.எஸ்.எம்.அர்ஹம் 

பொத்துவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் எம். எஸ். அப்துல் வாஸித் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் மகிழ்ச்சியான செய்தியுடன் அதே பொத்துவில் மண்ணின்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ். எம். எம். முஷர்ரப் அவர்கள் பொத்துவில் பிரதே சபை தவிசாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட இரு நிகழ்வுகளும் மிகவும் மகிழ்வளிக்கிறது.

இருவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இவர்களது அனுபவமும் திறமையும், கட்சியின் முன்னேற்றத்திற்கும், சமூக நலனுக்குமான பணிகளுக்கும் மிகுந்த உறுதுணையாக அமையும் என நம்புகிறேன்.

இவர்கள் இருவரும் கட்சியின் வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் வலிமையை உறுதிப்படுத்தும் வகையில் முழுமையாக அர்ப்பணித்து செயற்பட வேண்டும் என்பதையும், அது கட்சியின் எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதையும் இங்கு வலியுறுத்துகிறேன்.

ரஹ்மத் மன்சூர்
தேசிய பொருளாளர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

No comments

Subscribe Us