களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் விபத்து !!
செ.துஜியந்தன்
களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் முச்சக்கரவண்டியும் சிறியரக பட்டா வாகனம் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் இன்று(03) காலை 6.30 மணியளவில் களுவாஞ்சிக்குடி பிரதான சந்தியில் இடம்பெற்றுள்ளது களுவாஞ்சிக்குடி எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்பிவிட்டு வந்த முச்சக்கரவண்டி மீது மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த சிறியரக பட்டா வாகனம் மோதியதில் முச்சக்கர வண்டி சேதமடைந்துள்ளது. அதில் பயணித்த சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments