Column Left

Vettri

Breaking News

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் நாட்டிற்கு வருகை!!




 சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

அவர் 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தில் நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது: கடன் மற்றும் நிர்வாகம்” என்ற தலைப்பில் நாளை (16) முதல் இடம்பெறவுள்ள மாநாட்டில் கீதா கோபிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.


No comments