Column Left

Vettri

Breaking News

16வருடங்களின் பின்னர் சிறப்பாக நடைபெற்ற வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி மஹா கும்பாபிஷேம்!!




( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் திருகோணமலை,  வெருகல் - வெருகலம்பதி அருள்மிகு ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்  விசுவாவசு வருடம் வைகாசித் திங்கள் 25ம் நாள் 08.06.2025 ஞாயிற்றுக் கிழமை சிறப்பாக நடைபெற்றது.
16 வருடங்களகன் பின்னர் நடைபெற்ற இக் கும்பாபிஷேகம் பிரதிஷ்ட பிரதம குருவான அச்சுவேலி சிவாகம கலாநிதி சிவஸ்ரீ  வைத்தீஸ்வர குருக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது விநாயக வணக்கத்துடன் விஷேட திரவிய ஹோம மஹாயாகம் இடம்பெற்றது.

அத்தோடு பிள்ளையார் ,முருகனுக்கான கும்பமும் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் வெளி வீதி உலாவந்தது. இதன் பின்னர் அந்தண சிவாச்சாரியார்களால் கிரியைகள்  நடத்தப்பட்டு ராஜகோபுரத்திற்கு பிரதான கும்பநீர் சொரியப்பட்டது.

இதன் பின்னர் இறுதியாக கும்பாபிஷேகம் இடம்பெற்றது. நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான  முருக  பக்தர்கள் கலந்துக்கொண்டிருந்தமை  சிறப்பம்சமாகும்.

16 வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் கும்பாபிஷேகத்தில் அதிகளவான சைவ பக்த அடியார்கள் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.







No comments

Subscribe Us