Vettri

Breaking News

திருக்கோவில் பிரதேச சபை வரலாற்றில் சுயேட்சை முன்னிலையில்..






 ( வி.ரி.சகாதேவராஜா)


திருக்கோவில் பிரதேச சபைத் தேர்தலில் 
சுயேட்சைக்குழு ஒன்று அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழு வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ளது.

மொத்தம் 10 வட்டாரங்களில் 08 வட்டாரங்களில்  சுயேட்சை குழு அமோக வெற்றியை ஈட்டிஉள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக திருக்கோவில் பிரதேச சபை சுயேச்சை அணி வசமாகிறது.

திருக்கோவில் பிரதேச சபையில் சுயேட்சை அணி ஒன்று 08 ஆசனங்களையும் ,இலங்கை தமிழரசுக் கட்சி 06 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி மற்றும் சுயேச்சை அணி தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

16 ஆசனங்களில் 50 வீதமான 08 ஆசனங்களை சசிகுமார் தலைமையிலான சுயேச்சை அணி பெற்றுள்ளது.

எனவே ,அங்கு  சுயேட்சை அணித் தலைவரான பிரபல தொழிலதிபரும்,  கல்முனை ரோட்டரி கழக முன்னாள் தலைவருமான  சுந்தரலிங்கம் சசிகுமார் தவிசாளராக தெரிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வட்டாரங்களில் பெற்ற வாக்குகள் விபரம்

சுயேட்சை குழு 01 ( வண்டில் ) - 7829 வாக்குகள் 08 ஆசனங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 5666 வாக்குகள் 06 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி - 1068 வாக்குகள் - 01 ஆசனம்
சுயேட்சை குழு 02 ( பந்து ) - 504 வாக்குகள்  01 ஆசனம்

வட்டாரம் - 01 - தம்பட்டை, தம்பிலுவில் 
 சுயேட்சை குழு ( வண்டில் ) - 753
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 621

வட்டாரம் - 02 - தம்பிலுவில் மேற்கு 

இலங்கைத் தமிழரசுக் கட்சி 680
சுயேட்சை குழு ( வண்டில் ) - 600
வட்டாரம் - 03 - தம்பிலுவில் கிழக்கு 

சுயேட்சை குழு ( வண்டில் ) - 690
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 452
வட்டாரம் - 04 - தம்பிலுவில் மேற்கு 

சுயேட்சை குழு ( வண்டில் ) - 587
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 168
வட்டாரம் - 05 திருக்கோவில் மேற்கு 

சுயேட்சை குழு ( வண்டில் ) - 1588
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 1234
வட்டாரம் - 06 திருக்கோவில் கிழக்கு 

சுயேட்சை குழு ( வண்டில் ) - 994
இலங்கைத் தமிழரசுக் கட்சி -  440

வட்டாரம் - 07 விநாயகபுரம் வடக்கு 

சுயேட்சை குழு ( வண்டில் ) - 768
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 699

வட்டாரம் - 08 விநாயகபுரம் கிழக்கு 

சுயேட்சை குழு ( வண்டில் ) -  528
இலங்கைத் தமிழரசுக் கட்சி  - 471

வட்டாரம் - 09 விநாயகபுரம் மேற்கு 

சுயேட்சை குழு ( வண்டில் ) - 1005 
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 573 

வட்டாரம் - 10 - தாண்டியடி

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 328
சுயேட்சை குழு ( வண்டில் ) - 316

No comments