Vettri

Breaking News

மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு !




 மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு !



யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.


ஏழாலை பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.


இவர் தனது வீட்டில் மர அரிவு நிலையத்தை நடாத்தி வந்துள்ள நிலையில், நேற்றைய தினம் வழமை போன்று மர அரிவு வேலையில் ஈடுபட்டிருந்த போது தவறி இயந்திரத்தின் மேல் விழுந்ததில் இயந்திரம் வெட்டி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

No comments