Column Left

Vettri

Breaking News

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் நிரந்தர பீடாதிபதியாக கணேசரெத்தினம் நியமனம் !!




( வி.ரி.சகாதேவராஜா)

 மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் நிரந்தர பீடாதிபதியாக  தர்மரெத்தினம் கணேசரெத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

2023 இல் மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரிக்கு பதில்  பீடாதிபதியாக நியமிக்கப்பட்ட தர்மரெத்தினம் கணேசரெத்தினம் தற்போது பொதுச் சேவை ஆணைக்குழுவின் நிரந்தர நியமனம் பெற்றுள்ளார். கடந்த வாரம் அவனுக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த திரு. கணேசரெத்தினம் இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையில் முதல்தர அதிகாரி ஆவார்.

அவரது நிரந்தர நியமனத்தை  வாழ்த்தி  வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் கல்லூரியில் நடைபெற்றது.


No comments