களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் விபத்து!!
செ.துஜியந்தன்
களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் விபத்து சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை களுவாஞ்சிகுடி பிரதான வீதியின் வீரபத்திரர் ஆலய சந்தியில் மோட்டார் வாகனமும், மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இவ் விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
குறித்தத வீதியில் அடிக்கடி விபத்து சம்பவங்கள் ஏற்பட்டுவருவதினால் வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் மிக அவதானமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
No comments