Vettri

Breaking News

பட்டிருப்பில் அதிபர் ஆசிரியர்கள் வாண்மை விருத்தி செயலமர்வு!!!




செ.துஜியந்தன் 

பட்டிருப்பு கல்வி வலயத்தில் அதிபர், ஆசிரியர்,  மாணவர் நேர் மனப்பாங்கான அணுகு முறைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு  பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் வலயக் கல்விப் பணிமனையில் நடைபெற்றது. 
அக்சன் யுனிட்டி லங்கா மற்றும் சைல்ட் ஃபண்ட் சிறிலங்கா நிதி அனுசரணையில் நடைபெற்ற  இச் செயலமர்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி வைஷ்ணவி, உதவிக்கல்விப் பணிப்பாளர் சத்திதாஸ்  அக்சன் யுனிட்டி லங்கா நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ஜெகன்ராஜரெட்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இரு செயலமர்வாக நடைபெற்ற கருத்தரங்கில் முதலாவதாக ஆரம்ப பிரிவு ஆசிரியர்க அனுசரணையில் ள்  எவ்வாறு ஆரம்பப்பிரிவு மாணவர்களது நடத்தைக் கோலங்களை இனங்காண்பது மற்றும் நவீன கல்விச் சமூகத்திற்கு ஏற்ப மாணவர்கள் இலகுவாக விளங்கிக் கொள்ளும் வகையில் எவ்வாறு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுவது , மாணவர் நேர்மனப்பாங்கான அணுகுமுறையை வளர்த்தல் போன்ற விடயங்கள் கூறப்பட்டது.

மாலைவேளை இடம்பெற்ற  செயலமர்வில் ஆரம்ப பிரிவு பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள் கலந்து கொண்டனர். இங்கு மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரித்தல் மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு எழுத்தறிவு மையங்களை நிறுவுதல், தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அதிகரித்தல்  போன்ற விடயங்கள் தொடர்பில் அறிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments