பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு பாராட்டு விழா
செ துஜியந்தன்
பெரியநீலாவனண கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உதவும் பொற்கரங்களின் ஸ்தாபகர் கனடா விசு கணபதிபிள்ளையின் நிதி அனுசரணையில் அதிபர் திருமதி வாசுகி ஐங்கரன் தலமையில் இப் பாராட்டு விழா நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் விசு கணபதிப்பிள்ளை கலந்து கொண்டார்.
இம்முறை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டதுடன் சமூகசேவகர் உதவும் பொற்கரங்களின் ஷ்தாபகர் கனடா விசு கணபதிபிள்ளை பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்.
No comments