Vettri

Breaking News

பாலையடியில் லம்போஜிகனுக்கு உபநயனதீட்சை!!




( வி.ரி. சகாதேவராஜா)

 கிழக்கிலங்கையின் பிரபல சிவாச்சாரியாரும் காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வர் ஆலய பிரதம குருவுமான சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்களின் கனிஷ்ட புதல்வன் ம. லம்போஜிகன்  ஐயாவிற்கு உபநயன தீட்சை (பூநூல் அணியும் நிகழ்வு) நேற்று முன்தினம் ஆலயத்தில் நடைபெற்றது .

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தனது கனிஷ்ட புதல்வன் லம்போஜிகனுக்கு இந்த உபநயன தீட்சையை வழங்கினார் .

அத்தருணம் சிவஸ்ரீ சபா.கோவர்த்தன சர்மா உள்ளிட்ட  சிவாச்சாரியார்கள் குடும்பத்தினர் ஆலய பரிபாலன சபையினர் உறவுகள் கலந்து கொண்டார்கள்.
 
ஒரு தந்தை மகனுக்கு உபநயன தீட்சை செய்தமை  காரைதீவு வரலாற்றில் முதல் தடவையாகும்  என்பது குறிப்பிடத்தக்கது.





No comments