பனங்கண்டடிச்சேனையில் நெற்செய்கை அதிகரித்தல் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு
( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆயித்தியமலை பனங்கண்டடிச்சேனையில் நெற்செய்கையில் உற்பத்தி திறனை அதிகரித்தல் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கிறிஸ்டினா முரளிதரன் பிரதம அதிதியாகவும், கமர்ஷியல் வங்கியின் பிராந்திய முகாமையாளர் ஆர்.கஜரூபன், பிரதேச செயலாளர் என். சத்தியானந்தி, மாவட்ட விவசாய பணிப்பாளர் சனீர், கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ரீ. கிரிதரன், உதவி விவசாய பணிப்பாளர் காயத்திரி வேணுதாசன் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் விவசாய போதனாசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
No comments