Vettri

Breaking News

ஈஸ்ரர் தாக்குதல் அறிக்கையை மீளாய்வு செய்ய விசேட பொலிஸ் குழு நியமனம்






ஈஸ்ரர் தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


இக்குழுவானது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் செயற்படவுள்ளது.


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கத்துவம் பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments