Column Left

Vettri

Breaking News

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பஸ் டிப்போ அபிவிருத்தி!




 ( வி.ரி.சகாதேவராஜா)


கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பஸ் டிப்போ அபிவிருத்தியடையவுள்ளது.

ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்காவேலைத் திட்டத்தின் கீழ் இலங்கையில் 50 போக்குவரத்து பஸ் டிப்போக்கள் தெரிவு செய்யப்பட்டன .
அதில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பஸ் டிப்போ மற்றும் தெஹியத்தகண்டிய பஸ்டிப்போ ஆகிய இரண்டு டிப்போக்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன .

கல்முனை போக்குவரத்து சாலையின் புனரமைப்பு சம்பந்தமான கலந்துரையாடல் நேற்று (7) திங்கட்கிழமை கல்முனையில் டிப்போ முகாமையாளர் வி.ஜௌபர் தலைமையில் நடைபெற்றது.

 போக்குவரத்து அமைச்சர்  பிமல் ரத்நாயக்காவின்   பணிப்பின் பேரில் போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர்  வி.ஜெகதீசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்  அபூபக்கர் ஆதம்பாவா  இணைந்து கல்முனை போக்குவரத்து சாலையின் புனரமைப்பு சம்பந்தமான பார்வையிட்டு கலந்துரையாடினர்.

  அங்கு புதிதாக இரண்டு குளீரூட்டப்பட்ட பஸ்கள் வழங்குதல் மேலும் கட்டிடங்களை விஸ்தரித்தல் நிலைய காணியை நிரப்புதல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அதேவேளை கல்முனை பஸ் நிலையத்தையும் clean srilanka வேலைதிட்டத்தின் மூலம் சீர் செய்வது பற்றியும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.







No comments