கோளாவில் கிராமத்தில் முதலாவது வைத்தியத்துறை மாணவனாக துஸ்மிதன் தெரிவு! வரலாற்று சாதனை படைத்த துஸ்மிதனுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன!
(வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கோளாவிலைச் சேர்ந்த புவனேந்திரன் துஸ்மிதன் க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் மூன்று பாடங்களிலும் Aசித்திகளைப் பெற்று மருத்துவபீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.
அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரியில் பயின்ற அவர் 2024 கபொத உயர் தர பரீட்சையில் 3 Aபெற்று
அம்பாறை மாவட்டத்தில் ஏழாம் நிலையினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோளாவில் மண்ணின் முதலாவது வைத்தியர் என்ற பெயரினையும் பெற்று ஊருக்கும் ஊர்மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
No comments