Column Left

Vettri

Breaking News

அநுர தவிர வேறு யாருடனும் இணையத் தயார் – அர்ச்சுனா




தேசிய மக்கள் சக்திக்கு இம்முறையும் தமது மக்கள் வாக்களிக்குமாயின் அது தாமே தமக்கு வைக்கும் கடைசி உலையாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்திருந்தார்.


தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;


“.. நான் பாராளுமன்றுக்கு செல்வதற்கு முன்னர் எனக்கு அனுபவம் குறைவு. சென்றதன் பின்னர் தான் தேசிய மக்கள் சக்தி (NPP) இனது நிலைப்பாடு தெரிந்தது. அதற்கு இந்த தேர்தலில் வாக்களிக்குமாயின் நாம் எங்களுக்கு வைக்கும் கடைசி உலையாக இருக்கும்.


யாழ் மாகாண சபை வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும். அது பிரச்சியினையில்லை. யாழில் மட்டும் எமது வாக்காளர்கள் கஜேந்திர பொன்னம்பலத்தினுடைய கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.


கஜேந்திரன் பொன்னம்பலம் அண்ணாவுடன் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஆனால் ஸ்ரீதரனுக்கோ சுமந்திரனுக்கோ எந்த வாக்குகளையும் விடக் கூடாது என்பது எனது தெளிவான வேண்டுகோள்..”



No comments