Greenwich English Nursary இன் வருடாந்த பட்டமளிப்பு விழா!!
(Asm.Arham)
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஒரு பகுதியாக Playgroup, LKG, UKG ஆகிய பிரிவுகளைக் கொண்டு இயங்கி வரும் Greenwich English Nursary உடைய வருடாந்த பட்டமளிப்பு விழா (2025.02.02)பாடசாலை கேட்போர் கூடத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை வங்கியின் ஒலுவில் கிளை முகாமையாளர் திரு. தனபாலரத்தினம் பிரபாகர் அவர்கள் கலந்து கொண்டதோடு விசேட அதிதியாக Greenwich English Nursary உடைய ஸ்தாபக தலைவரும் இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபருமாகிய A.G. முஹம்மது றிசாத் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இறுதி ஆண்டு UKG மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்வு இடம் பெற்றதுடன் மாணவர்கள் பலதரப்பட்ட கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக பிரதம அதிதி தமது உரையில் முன்பள்ளி பாடசாலையின் முக்கியத்துவத்தினை எடுத்தியம்பியதுடன் சேமிப்புப் பழக்கத்தினை ஏற்படுத்துவதற்காக Greenwich English Nursary மாணவர்கள் மற்றும் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்யாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வங்கிக் கணக்கினைத் திறந்து கொடுப்பதாக வாக்களித்தார்.
No comments