Column Left

Vettri

Breaking News

Clean Srilanka வேலைத்திட்டம்-மருதமுனையில் வெற்றிகரமாக முன்னெடுப்பு!!




கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் திண்மக் கழிவுகளை முழுமையாக அகற்றல் மற்றும் கடற்கரை பிரதேசத்தை சுத்தம் செய்யும் விஷேட வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வியாழக்கிழமை(6)  நிறைவு பெற்றுள்ளது.

இறுதி நாளான இன்று மருதமுனை மற்றும் பாண்டிருப்பு பிரதேசங்களில் இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருதமுனையில் மேற்கொள்ளப்பட்ட கடற்கரை சுத்தப்படுத்தல் பணியில் மக்பூலியா பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் முழுமையாக பங்குபற்றி ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இவ்வேலைத் திட்டம் கல்முனை மாநகர சபையினாலும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்து.

இதன் பிரகாரம் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி   தலைமையில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா  பங்குபற்றலுடன் கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருதில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ்வேலைத் திட்டம் கல்முனை, கல்முனைக்குடி, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மணற்சேனை, பெரிய நீலாவணை உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக 06 நாட்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அனைத்து பிரதேசங்களிலும் கொத்தணி அடிப்படையில் திண்மக் கழிவுகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளதுடன் கடற்கரை மற்றும் சூழவுள்ள பகுதிகளிலும் திண்மக் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இனிவரும் நாட்களில் கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையானது வழமை போன்று முன்னெடுக்கப்படும் எனவும் பொது மக்கள் தமது வீடுகளில் அன்றாடம் சேருகின்ற கழிவுகளை சேகரித்து திண்மக்கழிவகற்றல் வாகனங்களில் முறையாக ஒப்படைக்குமாறும் பொது இடங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் கழிவுகளை வீசுவதை முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறும் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி கேட்டுக் கொண்டுள்ளார்







No comments