Column Left

Vettri

Breaking News

கல்லடிப் பாலத்தில் அமையவிருக்கும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிலைக்கான அடித்தளம் இடும் பணி பூர்த்தி!




 (




(வி.ரி.சகாதேவராஜா)


 உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் 
சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு  சுவாமி விபுலானந்தர்  நூற்றாண்டு விழா சபையின்  பூரண ஏற்பாட்டில் ,மட்டக்களப்பு கல்லடி  பாலத்தில் அமையவிருக்கும் இந்திய மாமல்லபுரத்தில் செதுக்கிய கருங்கல்லாலான  சுவாமி விபுலானந்த அடிகளாரின் திரு உருவச்சிலையை நிறுவும் அடித்தளம் நேற்று முன்தினம் இடப்பட்டது .

அடிகளாரின்  சிலை  அமைப்பு   செயற்குழுவின்    தலைவரும்   மட்டக்களப்பின் பிரபல வர்த்தகருமான  தேசபந்து  முத்துக்குமார் செல்வராஜா  களத்தில் நின்று அடித்தளம் இடும் பணியை மேற்பார்வை செய்தார்.

மட்டக்களப்பு நூற்றாண்டு விழாச் சபைத்தலைவர் கே. பாஸ்கரன் ( முன்னாள் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர்) உள்ளிட்ட குழுவினரும் அவதானித்தனர்.

 அடிகளாரின் சிலையானது தனி ஒரு     கருங்கல்லால்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது.   இதற்கான பூரண ஏற்பாடு அனைத்தும் இந்தியாவில் மாமல்லபுரத்தில்   திறமை வாய்ந்த தமிழ் நாட்டு சிற்பிகளால்   செதுக்கப்பட்டு முடிவுறும் தறுவாயில் இருக்கிறது .

சுவாமிகளின் எதிர்வரும் ஜனன தினத்தில் இச் சிலை நிறுவப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments