Column Left

Vettri

Breaking News

இன்று கொட்டும் மழையிலும் காரைதீவில் இடம்பெற்ற பாரம்பரிய தைப்பூசவிழா




(வி.ரி.சகாதேவராஜா) கொட்டும் மழைக்கு மத்தியில் இந்துக்களின் பாரம்பரிய தைப்பூசவிழாவானது இன்று 11 ஆம் தேதி செவ்வாய்கிழமையன்று காரைதீவில் சிறப்பான முறையில் நடைபெற்றது. காரைதீவு இந்துசமய விருத்திச்சங்கத்தின் தைப்பூசவிழா சம்பிரதாயங்கள் பண்பாடு கலாசாரவிழுமியங்கள் மற்றும் மரபுகளை பிரதிபலிக்கும்வகையில் புதிர் எடுக்கும் நிகழ்வுடன் நடைபெற்றது. இன்று காலை காரைதீவு கந்தசுவாமி ஆலயத்திலிருந்து புதிர் எடுத்துவரும் நிகழ்வு இடம்பெற்று அங்கிருந்து மத்தியவீதி ஊடாக புதிர் ஊர்வலம் இடம்பெற்று காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. அங்கு தைப்பூசத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

No comments