37 வயது சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது!!
பாறுக் ஷிஹான்
ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்புத் தரவை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(2) இடம்பெற்
சம்மாந்துறை சுற்றுச்சூழல் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை தொடர்ந்து மேற்குறித்த வீடு ஒன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதன் போது 37 வயதுடைய சந்தேக நபர் உட்பட மறைத்து வைக்கப்பட்ட 770 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர் உட்பட சான்றுப் பொருள்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .
குறித்த சோதனை நடவடிக்கை கல்முனை பிராந்தியத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்ச௧ர் உதுமாலெவ்வை மஹ்மூத்கான் இப்னு அசாரின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் ஆலோசனைக்கமைய பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு பொறுப்பதிகாரி ஏ. நஸார் தலைமையிலான பொலிஸ் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments