Column Left

Vettri

Breaking News

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான 22 வயது இளைஞனிடம் விசாரணை முன்னெடுப்பு!!




பாறுக் ஷிஹான்

கல்முனை விசேட அதிரடிப் படையினரால்  கைது செய்யப்பட்ட 22 வயது இளைஞன்  குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நிலையில்   இன்று (3)   இரவு  கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில்   ஐஸ் போதைப் பொருளுடன்   கைதானார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக  பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட கடற்கரை பள்ளிவாசல்  வீதி   அருகில் வைத்து 22 வயதுடைய சந்தேக நபரே  இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது  கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம்   ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன்  சந்தேக நபர்கள் உள்ளிட்ட  சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக கல்முனை தலைமைய  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும்  இந்த கைது நடவடிக்கையானது     கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் தலைமையில்   முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Subscribe Us