Column Left

Vettri

Breaking News

சம்மாந்துறை பொலிஸ் நிலைய 2024 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை!!




 பாறுக் ஷிஹான்

 

சம்மாந்துறை  பொலிஸ் நிலையத்தின் 2024 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையில் இன்று  சம்மாந்துறை பொலிஸ் நிலைய உள்ளக  மைதானத்தில்  நடைபெற்றது.


 

இந்நிகழ்விற்கு  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு   அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.


 மேலும் பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள்  சுற்று சூழல்  பொலிஸ்உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகளை பார்வையிட்டதுடன்  பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.


இந்நிகழ்வில்,  பொலிஸ் உப பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் என கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.













No comments