Column Left

Vettri

Breaking News

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற்அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதியாக ஜுனைட் நியமனம்!!






( வி.ரி.சகாதேவராஜா)

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற்
கல்லூரியின் 06 வது பீடாதிபதியாக எம்.சி.ஜூனைட் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட நியமன கடிதத்தின் பிரகாரம் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 06 வது புதிய பீடாதிபதியாக எம்.சி. ஜூனையிட் முன்னாள் பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் (28) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். 

இவர் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட நியமன கடிதத்தின் பிரகாரம் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் நிதி மற்றும் நிருவாகத்திற்கான உப பீடாதிபதியாக கடமையாற்றியதுடன், மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின்  முன்னாள் உப பீடாதிபதியாகவும், மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் முன்னாள் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.

No comments