Column Left

Vettri

Breaking News

இன்று மழை தணிந்தது ; வெள்ளம் வற்றியது; போக்குவரத்து சுமுகம்!!!





( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை இன்று வெள்ளிக்கிழமை தணிந்தது.

பிரதான வீதிகளுக்கு மேலாக பரவிய வெள்ளம் வற்றியது.

அதனால் சகல பிரதேசங்களுக்குமான போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் காரைதீவு மாவடிப்பள்ளி பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் தினம் வீதிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து சென்றது .

எனினும் தற்போது நீர் வேகமாக குறைந்து போக்குவரத்து எந்த விதமான சிரமமும் இன்றி வழமைக்கு திரும்பியது.
நேற்று பரவலாக வெயில் எறித்தது. மக்கள் நிம்மதியாக நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

எனினும் இன்று 18 ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் பாரிய மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியுடன் மேலைக் குழப்பமும், மேடன் யூலியன் அலைவின் வருகையும் இருப்பதனால் எதிர்வரும் 18.01.2025 முதல் 21.01.2025 வரை மிகக் கனமழை  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

1. எதிர்வரும் 18.01.2025 முதல் 21.01.2025 வரை மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

2. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலம் நிரம்பு நிலையை அடைந்துள்ளது.

3. கிழக்கு மாகாணங்களின் முக்கிய குளங்களான சேனாநாயக்க சமுத்திரம், உன்னிச்சை , கந்தளாய்,வாகனேரி, கடுக்காமுனை, நவகிரி, வீராகொட, றுகம் குளம் போன்றன கிட்டத்தட்ட அவற்றின் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

4. வடக்கு மாகாணத்தின் பிரதான குளங்களான இரணைமடு, வவுனிக்குளம், முத்தையன் கட்டு, கணுக்கேணி, தண்ணிமுறிப்பு போன்றன தற்போது மேலதிக நீரை வெளியேற்றுகின்றன.

4. இந்த சூழ்நிலையில் எதிர்வரும் 18.01.2025 முதல் 21.01.2025 வரை கிடைக்கும் கன மழை பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்வான பகுதிகளிலும், குளங்களின் மேலதிக நீர் வெளியேறும் பகுதிகளுக்கு அண்மையில் உள்ள மக்களும் இந்நாட்களில் மிக அவதானமாக இருப்பது அவசியம்.

6. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் இதனைக் கருத்தில் கொண்டு தமது அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.  என யாழ் பல்கலைக்கழக புவியியல் துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா  அறிவித்துள்ளார்

No comments

Subscribe Us