Column Left

Vettri

Breaking News

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் விபத்து!!




 தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 100வது கிலோமீற்றரில் கார் ஒன்று லொறியுடன் மோதியதில் பத்து வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பின்னதுவ நிர்வாக நிலையம் தெரிவித்துள்ளது.


மாத்தறை நுபே பகுதியைச் சேர்ந்த செனுதி தம்சரா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த சிறுமியின் தாய், தந்தை மற்றும் மூத்த சகோதரி படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த லொறி மற்றும் அதே திசையில் பயணித்த கார், லொறியின் பின் பக்கம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது

No comments

Subscribe Us