Vettri

Breaking News

நிந்தவூர் கிறிக்கட் சமர் காலநிலை சீரின்மையால் இரு கழகங்களும் இணைச் சம்பியன்களாகின.




நிந்தவூர் அரபா விளையாட்டுக்கழகம் நடாத்திய இறுதி கிறிக்கட் போட்டியில் சீரற்ற காலநிலையால் நிந்தவூர் முஸ்தகீன் விளையாட்டுக் கழகமும்,நிந்தவூர் ஹிக்மா விளையாட்டுக்கழகமும் இணைச் சம்பியன்களானது. 

 (அஸ்ஹர் இப்றாஹிம்)

நிந்தவூர் அரபா விளையாட்டுக்கழம் நடாத்திய கிறிக்கட் 20-20 சம்பியன்சிப் போட்டிகள் நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் நிந்தவூர் முஸ்தகீன் விளையாட்டுக்கழகம் புளூமெளண்டன்,பெஸ்ட் இலவன், ஈஸ்டன் வொறியர்ஸ்,மஹசினி ஆகிய விளையாட்டுக்கழகத்துடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டு இறுதிப் போட்டியில் நிந்தவூர் ஹிக்மா விளையாட்டுக்கழகத்தை எதிர்கொண்ட வேளையில் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு அணிகளுக்கும் இணைச் சம்பியன் வழங்கப்பட்டது.





No comments