Column Left

Vettri

Breaking News

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ கைது!!




 அண்மையில் ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த BMW கார்  தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (23)  கைது செய்யப்பட்டுள்ளார்.


இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி விசாரணைகள் தொடர்பிலான வாக்குமூலம் ஒன்றையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை சதொச ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை உத்தரவையும் பிறப்பித்திருந்தது.

No comments

Subscribe Us