Column Left

Vettri

Breaking News

கிழக்கு மாகாணத்தில் விஸ்தரிக்கும் முதன்மை நடவடிக்கையாக, பிராந்திய தலசீமியா மையம் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் திறந்து வைப்பு!!






(அஸ்ஹர் இப்றாஹிம்)


தலசீமியா, ஒரு நபருக்கு அவரது பெற்றோரிடமிருந்து கடத்தப்படும் மரபணு நோய் ஆகும் . ஹீமோகுளோபின் உற்பத்தியில் குறைபாடுகளை ஏற்படுத்தி குருதிச்சோகை உண்டாக்குதலே இந் நோய்க் குறியாகும்.

மட்டக்களப்பு பிரதேசத்தில் 200 மேற்பட்டவர்களுக்கு காணப்படும் இவ் நோயானது, நாடளாவிய ரீதியில் 2000 க்கு அதிகமான குழந்தைகளை பாதித்துள்ளதாகவும் கண்டறிப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில், நோயாளர்களை அடையாளம் காணல், நோயாளர்களுக்கான இரத்தமாற்று சிகிச்சை , நோய்த்தடுப்பு ஆலோசனைகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள்  உட்பட்ட பல்வேறு வகையான நோய்தடுப்பு சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான விசேட ஒருங்கிணைப்பின் தேவைகருதி அமைக்கப்பட்ட இவ் நிலையத்திற்கான நிதிப்பங்களிப்பினை அயர்லாந்தைச் சேர்ந்த சோனியா லிஞ்ச்  என்கிற குழந்தையின் நினைவாக, பெற்றோர்கள் நண்பர்கள் மற்றும் சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தின் (IMHO) ஆகியோர் வழங்கியிருந்தார்கள்.

ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி , டொக்டர் எஸ்.குணராஜசேகரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சம்பிரதாய பூர்வ நிலையத் திறப்பு விழாவில் , மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆர். முரளீஸ்வரன், மட்டக்களப்பு போதனா வைத்திசாலைப் பிரதிப் பணிப்பாளர், டொக்டர். பீ. மைதிலி உட்பட போதனா வைத்திசாலையின் குழந்தை வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், மற்றும் பிராந்திய வைத்திய அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர், 

  இவ் நிகழ்வினை  தொற்றாநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர்  இ. உதயகுமார் அவர்கள் நிகழ்வினைச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us