Column Left

Vettri

Breaking News

பெரிய கல்லாறு புனித அருளானந்தர் ஆலய வருடாந்த திருவிழா!!




மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் அமைந்துள்ள பெரிய கல்லாறு புனித அருளானந்தர் ஆலய வருடாந்த திருவிழா 21.07.2024








மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள  பெரிய  கல்லாறு புனித  அருளானந்தர் ஆலய திருவிழா திருப்பலியானது  21.07.2024 இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை 7:30 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி  அன்ரன் டெறன்ஸ் றாகல்  அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

கடந்த 9 நாட்கள் மாலை வழிபாடுகள் இறைமக்களை தயார்படுத்தும் வண்ணம் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கருப்பொருளை மையப்படுத்தியதாக இறைமக்களுக்கு சிந்தனைகள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து  சனிக்கிழமை மாலை வேஸ்பர் நற்கருணை ஆராதனை வழிபாடு அருட்தந்தை ஜோர்ஜ் திசாநாயக்க  அடிகளாரின்  தலைமையில்  இடம் பெற்றது.

 திருவிழா திருப்பலியினை   அருட்தந்தை ஜோர்ஜ் திசாநாயக்க அடிகளார்  தலைமைதாங்கி  பங்குத்தந்தை  அன்ரன் டெறன்ஸ் றாகல் அடிகளாரும், உதவி பங்கு தந்தை  கர்ஷதன் றிச்சட்சன் அடிகளாரும், அருட்சகோதரர்களும் இணைந்து கூட்டு திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர். 

திருப்பலி நிறைவில்  புனித  அருளானந்தர் திருச்சுருபம் ஆலயம் சுற்றி பவனியாக எடுத்துவரப்பட்டதுடன்  புனித அருளானந்தர் திருச்சுருப புகழ்பாக்கள் இசைக்கப்பட்டு கவிகள் இசைக்கப்பட்டு இறுதி செபத்துடன்  புனித அருளானந்தர் திருச்சுருப ஆசீரை  உதவி பங்கு தந்தை கர்ஷதன் றிச்சட்சன்  அடிகளார் இறைமக்களுக்கு வழங்கி வைத்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

அத்தோடு பங்குத்தந்தை அவர்களினாலும்,   திருவிழா சிறப்பாக அமைய சகல வழிகளிலும் உதவிகளை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்ததோடு, திருவிழா வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது... 

மேலும் நவநாள் காலங்களில் வினாவிடை கேள்வி போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றோருக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.


 செய்தியாளர்  க. டினேஸ்

No comments

Subscribe Us