முச்சக்கரவண்டியில் பலவந்தமாக காதலனை கடத்தி சென்ற காதலி
முச்சக்கரவண்டியில் 18 வயது இளைஞனை கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில் அவரது 17 வயது காதலி மற்றும் காதலியின் தந்தையை அகலவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் (16) பிற்பகல் மஹகம பொலேகொட பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியை பழுதுபார்ப்பதற்காகச் சென்ற வேளையிலேயே அவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாகவும், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
இந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்த உப பொலிஸ் பரிசோதகர் ஜெயசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இளைஞனை அவரது காதலியின் வீட்டில் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த இளைஞனை பொலிஸார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன் அவரது காதலி மற்றும் காதலியின் தந்தை நேற்று (17) மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
No comments