Column Left

Vettri

Breaking News

யாழ்பாணம் செல்வசந்நதியிலிருந்து ஆரம்பிக்கின்றது கதிர்காம பாதயாத்திரை!!








இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் இன்றைய தினம் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம் பெற்று அடியார்கள் பாதயாத்திரையினை அரோகரா கோஷங்கள் முழங்க பாதயாத்திரையினை ஆரம்பித்தனர்

கடந்த வருடத்தினை போன்று இவ்வருடமும் ஜெயாவேல்சாமி தலைமையில்  நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செல்வதற்குத் தயாராக இருக்கின்றனர்

வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மொனராகல 7மாவட்டங்களையும் இணைத்து 48நாட்களில் 98ஆலயங்களைத்தரிசித்து 815கிலோமீற்றர் தூரத்தை நடந்துகடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிக நீண்ட தூர கதிர்காமபாதயாத்திரையாக கருதப்படுகின்றது.

கடந்த 23வருடங்களாகச் சைவமரபு பாரம்பரியத்துடன் இடம்பெற்றுவரும் இப் பாதயாத்திரை கதிர்காமக்கந்தனாலய கொடியேற்றத்தினத்தில் கதிர்காமத்தைச் சென்றடைவது வழமையாகும்.

இன்றைய தினம் சந்நதியில் மே 11ஆம் திகதி அதிகாலை நடைபெற்ற விசேட பூஜையினைத் தொடர்ந்து மோகன் சுவாமியால் வேலாயுதமானது கதிர்காம பாதயாத்திரைக் குழுத்தலைவர்  ஜெயாவேல்சாமியிடம் சம்பிரதாய பூர்வமாக ஒப்படைக்கப்பட்டு

பாதயாத்திரை ஆரம்பித்து வற்றாப்பளை கண்ணகை அம்மனாலயத்தை அடைந்து பின்னர் அங்கிருந்து ஜெயாவேல்சாமிஅணியில் வழமையாக பயணிக்கும் நூறு பக்தர்களுடன் மீண்டும் பாதயாத்திரை இடம்பெறும்.

கதிர்காம ஆடிவேல்விழா உற்சவம்.

இதேவேளை கதிர்காம ஆடிவேல்விழா உற்சவத்திற்கான கன்னிக்கால் அல்லது பந்தல் கால் நடும் வைபவம் எதிர்வரும் மே 26ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

எனவே யூன் 05ஆம் திகதி  கொடியேற்றம் இடம்பெற்று யூலை 21ஆம் திகதி  எசலபெரஹராவுடனான தீர்த்தோற்சவம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

எது எவ்வாறிருப்பினும் உற்சவம் தொடர்பான இறுதி முடிவுகள் காட்டுப்பாதை திறப்பு உற்சவ காலம் பெரஹரா தொடர்பிலான இறுதிக்கட்ட தீர்மானங்கள் முடிவுகள் மொனராகல மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவிருக்கும் முக்கிய கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

பாதயாத்திரை   ஆரம்பம்..

1972ஆம் ஆண்டில் அமெரிக்க முருகபக்தர் பற்றிக்ஹரிகன் கதிர்காம பாதயாத்திரையை ஒழுங்கமைக்கப்பட்ட குழுவடிவில் ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாக 1978இல் அவர் ஓய்வுபெற்றதும் அவர் தாங்கிவந்த வேலை காரைதீவைச்சேர்ந்த வேல்சாமி மகேஸ்வரனிடம் ஒப்படைத்தார்.

அன்றிலிருந்து 21வருடங்களாக வேல்சாமி தலைமையில் பாதயாத்திரை நடைபெற்றுவந்தது.கடந்த மூன்று  வருடங்களாக ஜெயாவேல்சாமி இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் வெருகலிலிருந்து இது இடம்பெற்றது. எனினும் நாட்டின் அமைதிநிலவியபிற்பாடு 2012முதல் சந்நிதியிலிருந்து இப்பாதயாத்திரை ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us