Column Left

Vettri

Breaking News

சில பிரதேசங்களில் மழை பெய்யும் வாய்ப்பு!!!




 



சில பிரதேசங்களில் மழை பெய்யும் வாய்ப்பு

சப்ரகமுவ, மேல்,வடமேல்  மற்றும் தென் மாகாணங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். 


சப்ரகமுவ,மேல் மற்றும் தென்  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் நுவரேலியா  மாவட்டத்தின்  சில இடங்களிலும்  மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய  மழை பெய்யக்கூடிய வாய்ப்புக்  காணப்படுகின்றது.  

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில்  வறட்சியான  வானிலை நிலவக்கூடும். 

மத்திய, சப்ரகமுவ,மேல் மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் கிழக்குத்திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்...







No comments

Subscribe Us