Column Left

Vettri

Breaking News

கொழும்பில் தோல் பொருள் கண்காட்சி ; பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்!!




 

இலங்கை பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சு, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை ஆகியன இணைந்து ஒழுங்கு செய்த 14ஆவது பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் கண்காட்சி கடந்த 8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கண்காட்சியானது இலங்கையில் பாதணிகள் மற்றும் தோல் துறை சம்பந்தமாக ஒவ்வொரு வருடமும் நடைபெறும் நிகழ்வாகும். மேலும் 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தின. இவ் நிகழ்வில் Rite Shu பிரைவேட் லிமிடெட் இலங்கையில் முன்னோடியான ஷு உற்பத்தி நிறுவனமாகும். இந்த கண்காட்சியில் பல ஆண்டுகளாக தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி வருகிறது.

 

ருஸைக் பாரூக்

No comments

Subscribe Us