Column Left

Vettri

காரைதீவு விபுலானந்தாவில் பிரதி அதிபராக திருமதி.அருந்தவவாணி சசிகுமார் பதவியேற்பு!!















அண்மையில் நடைபெற்ற இலங்கை அதிபர் சேவைப் போட்டிப்பரீட்சையில் அதிபர் சேவை தரம் 3 இல் சித்திபெற்ற இவர் விபுலானந்தா மத்திய கல்லூரியின் பிரதி அதிபராக 05.02.2024 முதல் செயற்படும்வண்ணம் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர்  14 வருடங்களாக ஆசிரியராக காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் கடமையாற்றி கடந்த இரு வருடமாக சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட வீரமுனை மகா வித்தியாவயத்தில் ஆங்கில பாட  ஆசிரியராக கடமையாற்றியிருந்தார். கிழக்குப் பல்கலைக்கழத்தில் கலைப்பட்டதாரியான அவர் ஆங்கிலப்  பாடத்தில் சிறப்புப் பட்டமும் பெற்றிருந்தார்.  மேலும்  தேசிய கல்வி நிருவகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவில் சிறப்பு சித்தி பெற்று  PGDE (merit), கிழக்குப் பல்கலைக்கழகத்தில்  கல்வி முதுமானிப்(M.Ed) பட்டத்தினையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவரது சேவைகள் தொடர பாடசாலைச் சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments