Column Left

Vettri

Breaking News

72 சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் !!





 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13) காலை 06.30 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

நிதியமைச்சகத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தாதியர் சேவையின் பல கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் நாளை (14) கொழும்பில் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதிவத்த தெரிவித்தார்

No comments