Column Left

Vettri

Breaking News

4 கோடி பெறுமதியான சட்டவிரோத பொருட்கள் அழிப்பு!




 சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 4 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த அரிசி, மஞ்சள் கொத்தமல்லி நிலக்கடலை, உட்பட 7000 கிலோ கிராம் உணவுப்பொருட்களும், சட்டவிரோத கிருமிநாசினிகளுமே இவ்வாறு அழிக்கப்பட்டது. 

குறித்த பொருட்கள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச எல்லைப்பகுதியில் வைத்து சுகாதார பரிசோதகர்களால் பறிமுதல்செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுப்பத்தப்பட்டிருந்தது. அவற்றை உடைமையில் வைத்திருந்த நபர்களுக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் தண்டப்பணம் நீதிமன்றால் விதிக்கப்பட்டது,  

இந்நிலையில் வவுனியா பம்பைமடுப்பகுதியில் வைத்து மேலதிக நீதவான் ஜெ. சுபாஜினி மற்றும், சிங்கள பிரதேசசபை செயலாளர், விமலவேணி நிசங்க, சுகாதார பரிசோதகர்கள் முன்னிலையில் குறித்த பொருட்கள் அழிக்கப்பட்டது.


No comments