Column Left

Vettri

Breaking News

அடுத்த மாதம் மேலும் 1300 வைத்தியர்களுக்கு நியமனம்





 நாட்டின் அரச வைத்தியசாலைகளில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் மேலும் 1300 வைத்தியர்கள், நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வைத்தியர்கள் பயிற்சியை முடித்ததும் நியமனம் வழங்கப்படும் என, சுகாதார செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வாரம் பயிற்சிகளை நிறைவு செய்த 90 மருத்துவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் வைத்தியர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும் என குறிப்பிட்டார்.

No comments

Subscribe Us