Column Left

Vettri

Breaking News

இடியுடன் கூடிய மழை!!




கிழக்கு, வடமத்திய  மற்றும்  ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். 

வானிலை குறித்து அவர் கூறுகையில், 

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின்  பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும்  பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது


இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

மத்திய, சப்ரகமுவ மற்றும்  மேல்  மாகாணங்களின்  சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொழும்பு  தொடக்கம் காலி ஊடாக மாத்தறை  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள  கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன்கூடிய   மழை பெய்யக்கூடும்.  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத்  திசையில்  காற்று வீசும். 

கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை  ஊடாக பொத்துவில்  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

அனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.  

No comments

Subscribe Us