Column Left

Vettri

Breaking News

‘யுக்திய’வுக்கு ஆசி வேண்டி நல்லூரில் விசேட வழிபாடு!!




 எம்.றொசாந்த் 

நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு விசேட செயற்றிட்டமான ‘யுக்திய’ நடவடிக்கைக்கு ஆசி வேண்டி யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் பொலிஸார் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க,   போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டமாகிய ‘யுக்திய’வேலை திட்டம் பொலிஸாரால் நாடுபூராகவும்  முன்னெடுக்கப்பட்டு வருவதோடு  போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்துபவர்கள் என பலரும் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

இந் நிலையில் குறித்த ‘யுக்திய’  நடவடிக்கைக்கு ஆசி வேண்டி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் பொலிஸாரால் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

வழிபாட்டில் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட அத்தியட்சகர், யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் , யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். 



No comments

Subscribe Us