Column Left

Vettri

Breaking News

பலத்த மழை !!





 வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் நாளையும் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என அதேவேளை, பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் .

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலையிலும் மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

No comments

Subscribe Us