Column Left

Vettri

Breaking News

கடந்த 24 மணிநேரத்தில் 836 பேர் கைது!!





நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 836 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 579 பேரும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட பட்டியலில் உள்ள 257 பேரும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 6 பேர் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றனர் அத்துடன், கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான ஒருவர் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதேநேரம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் விசேட பணியகத்தினால் தேடப்படும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 18 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்புகளின் போது, 142 கிராம் ஹெரோயின், 95 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 1650 போதைமாத்திரைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

No comments

Subscribe Us