Column Left

Vettri

Breaking News

போகம்பர சிறைச்சாலை சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்படும் – திலும் அமுனுகம!





 கண்டி போகம்பர சிறைச்சாலையை சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு உள்ளூர் முதலீட்டாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க போகம்பர சிறைச்சாலையில் அதன் வரலாற்றுப் பெறுமதியை நிலைநிறுத்தி ஹோட்டல் ஒன்று நடத்தப்படும் எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், யால ஹில்டனை நிர்மாணித்து அண்மையில் திறந்துவைத்த மெல்வா குழுவினால் நிர்மாணிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையும் (UDA) போகம்பர சிறைச்சாலை வளாகத்தை மறுசீரமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்திடம் அனுமதி பெற்றுள்ளது.

பிரித்தானிய ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட, கண்டியில் உள்ள மூன்று மாடி போகம்பர சிறைச்சாலை இலங்கையின் இரண்டாவது பெரிய சிறைச்சாலையாகும், மேலும் இது ஒரே அடித்தளத்தில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிக நீளமான கட்டிடமாகும். 138 ஆண்டுகள் செயற்பட்ட சிறை 2014 இல் மூடப்பட்டது

No comments

Subscribe Us