13 வயது மாணவியை காதலித்து பாலியல் துஷ்பிரயோகப்படுத்திய இராணுவ சிப்பாய் கைது!!
புத்தளம் - ஆனமடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை காதலித்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இராணுவ சிப்பாய் நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் குருவிட்ட இராணுவ முகாமில் கடமையாற்றும் 19 வயதுடைய இராணுவ சிப்பாயாவார். இவர் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் தொலைபேசி மூலம் தொடர்ந்து தொடர்பிலிருந்துள்ளனர். சந்திக்க வருமாறு மாணவியை அழைத்த குறித்து இராணுவ சிப்பாய் ஆள் நடமாட்டமில்லாத தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி இந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து மாணவியின் பெற்றோர் இது தொடர்பில் நவகத்தேகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இராணுவ சிப்பாய் ஆணமடுவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments