Column Left

Vettri

Breaking News

தாய்க்கு அஞ்சி மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த சிறுவன்!




 


பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செர்பென்டைன் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளை மெகசின் வீதியில் வசிக்கும் 16 வயது சிறுவனே காயமடைந்துள்ளார்.

காயமடைந்த சிறுவனின் தாய், சிறுவன் வீட்டில் இல்லாததை அறிந்து அவரைக் தேடியுள்ளார்.

பின்னர், அவர் அடிக்கடி செல்லும் இடமான அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டிற்கு சென்று அழைத்த போது வீட்டுக்குள் இருந்த சிறுவன் தாய்க்கு தெரியாமல் பின் ஜன்னல் வழியாக கீழே இறங்க முற்பட்டுள்ளார்.

அப்போது, ​​சிறுவன் விபத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுவன் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Subscribe Us