Column Left

Vettri

Breaking News

யாழ். வட்டுக்கோட்டையில் நகைகளை திருடிய குற்றத்தில் ஒருவர் கைது




 




யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து தாலிக்கொடி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தாலிக்கொடி உள்ளிட்ட 08 பவுண் நகைகள் திருட்டு போயிருந்தன. 

அது தொடர்பில் வீட்டார் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில்  செய்ததை அடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அப்பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். 

விசாரணைகளின் அடிப்படையில், திருட்டு போயிருந்த தாலிக்கொடி ஒன்று  சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் , தொடர்ந்தும் சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments

Subscribe Us